தமிழகத்தில் 3ஜி செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என கோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ கூறினார்
இது குறித்துகோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழக மாவட்ட தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்பட 38 இடங்களில் 3ஜி சேவை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 3ஜி இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. இப்போது 3ஜி சிம்கார்டுகள் இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 3ஜி சேவைக்கு துணைபுரியும் 180 பிடிஎஸ் செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 60 பிடிஎஸ் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். 3ஜி இணைப்பின் மூலம் விடியோ கால்ஸ், மொபைல் டிவி, அதிகவேக இன்டர்நெட், விடியோ கான்பரன்ஸ் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 3.6 எம்பிபிஎஸ் வேகத்தில் மொபைல் பிராட்பேண்ட் வசதியும் வழங்கப்படுகிறது. நிகழ்பட கண்காணிப்பு சேவையை (விடியோ சர்விலன்ஸ் சேவை) பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் அலுவலகத்தில் நடப்பதை கண்காணிக்க முடியும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக