உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

அங்காடியாக மாறிய கடலூர் தலைமை அஞ்சல் நிலையம்!

கடலூர்:

          கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் கடந்த சில நாள்களாக அங்காடியாகக் காட்சி அளிக்கிறது.

                 கடலூர் டவுன்ஹால் எதிரில் கடலூர் நகர தலைமை அஞ்சல் நிலையம் அமைந்து உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு வருவோருக்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. அஞ்சல் நிலையத்துக்கு முன் உள்ள நிலப்பகுதி முழுவதும், ஆக்கிரமிக்கப்பட்டு, பழக்கடை, டீக்கடை, சைக்கிள் கடை ஆகியன நிரந்தரமாக் வைக்கப்பட்டு உள்ளன.÷அஞ்சல் நிலையம் முன் போதிய இடம் இருந்தும், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வழிஇல்லை. இதனால் அஞ்சல் நிலையத்துக்குள் நுழையவே முடியாத பரிதாப நிலை ஏற்படுகிறது.

            அஞ்சலக ஊழியர்கள்கூட பிரதான வாயில் வழியாகச் செல்ல முடியாததால், கொல்லைப்புற வாயில் வழியாக உள்ளே செல்கிறார்கள்.÷அஞ்சல் நிலையம் முன் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஆண்டு முழுவதும் சாக்கடை நீர் ததும்பி வழிந்து கொண்டு இருப்பது, அங்கு வருவோர் மூக்கப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழக அரசு தேர்வாணையக் குழு மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அஞ்சல் நிலையத்தில் விநியோகிப்பதால் நிலைமை இன்னும் மோசம் அடைந்து விட்டது. இது குறித்து அஞ்சலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வர வில்லையே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து அதிகாரிகளைக் கேட்டால், 

                அஞ்சல் நிலையத்துக்கு போதிய இடவசதி இல்லை என்ற ஒரே பதிலுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இருக்கும் இடத்தையும் சாலையோரக் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது, இங்கு வருவோருக்குப் பெருத்த இடையூறாக உள்ளது குறித்து அஞ்சல் துறை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவில்லை.

              தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெல்லிக்குப்பம் சாலைக்குத் திரும்பும் இடத்தில் தலைமை அஞ்சல்நிலையம் அமைந்து இருப்பதால், அஞ்சல் நிலையத்துக்கு வருவோருக்குப் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இந்த இடத்தில்தான் நடத்தப்படுகிறது. இதனால் அஞ்சல் நிலையம் வருவதையே பொதுமக்கள் பலர் தவிர்த்துவிட நேரிடுகிறது. எனவே தலைமை அஞ்சல் நிலையத்தை வேறு வசதியான இடத்துக்கு மாற்றுவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior