குறிஞ்சிப்பாடி :
குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கீழ் வீதியில் உள்ள 10ம் எண் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், பறக்கும் படை தாசில்தார் கண்ணன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் அயன்குறிஞ்சிப்பாடி முழுவதும் ஆய்வு செய்தனர். கீழ் வீதியில் பாவாடை மகன் வடிவேல் என்பவர் வீட்டின் அறையில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அதில் 5,000 கிலோ அரிசி இருப்பதாகவும் இவற்றின் வெளி மார்க்கெட் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிவித்தனர். அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக