கடலூர்:
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கீழ்காணும் எண்ணிக்கையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
பல்வகைத் தானியங்கள் கதிரடிக்கும் இயந்திரங்கள் 8. இயந்திரம் ஒன்றுக்கு அதிகபட்ச மானியம் ரூ. 1.5 லட்சம். சோளக் கதிர் அடிக்கும் இயந்திரங்கள் 2. அதிகபட்ச மானியம் இயந்திரம் ஒன்றுக்கு ரூ. 80 ஆயிரம்.÷8 குதிரைத் திறன் கொண்ட, களை எடுக்கும் கருவிகள் 40. அதிகபட்ச மானியம் ரூ. 50 ஆயிரம். 4 சக்கர 20 குதிரைத் திறன் கொண்ட இடைஉழவு இயந்திரங்கள் 60. அதிகபட்ச மானியம் ரூ. 1.25 லட்சம். பவர் ஸ்பிரேயர்கள் 20. அதிகபட்ச மானியம் ரூ. 20 ஆயிரம்.
நெல் நாற்று நடவு இயந்திரங்கள் 15. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 1.25 லட்சம். பெரிய வகை நாற்று நடவு இயந்திரம் ஒன்று. மானியம் ரூ. 4 லட்சம். பவர் டில்லர்கள் 50. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 45 ஆயிரம். சுழல் கலப்பைகள் 70. மானியம் ரூ. 20 ஆயிரம். உழவுக் கருவிகள் 3. மானியம் ரூ. 10 ஆயிரம். நெல் அறுவடை இயந்திரங்கள் 10. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 4 லட்சம். கரும்பு சோகையை தூளாக்கும் இயந்திரங்கள் 2. மானியம் ரூ. 1 லட்சம். நிலம் சமன் செய்யும் லேசர் லெவலர் இயந்திரங்கள் 2. மானியம் ரூ. 1.7 லட்சம். செயின்வாள் போன்ற தோட்டக்கலை கருவிகள் 25. மானியம் ரூ. 25 ஆயிரம். இருபாலரும் இயக்கக்கூடிய சிறுவேளாண் கருவிகள் 300. மானியம் ரூ. 5 ஆயிரம். நெல் நாற்று தயாரிக்கும் தட்டுகள் 3 ஆயிரம். மானியம் ரூ. 50.
மேலும் வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் 5 சுய உதவிக் குழுக்களுக்கு டிராக்டர் தவிர்த்து இதர வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குதற்கு, குழு ஒன்றுக்கு மானியம் ரூ. 8 லட்சம். மேற்கண்ட கருவிகள், இயந்திரங்களுக்கு, இந்த ஆண்டுக்கான விலை மற்றும் கம்பெனிகள் அங்கீகாரம் பெறப்பட்ட உடன் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத் திட்டம் குறித்து விவசாயிகள், கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், சிதம்பரம், விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர்களை அணுகி பயன் அடையலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக