சிதம்பரம் :
சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
புவனகிரி ஒன்றியம் அம்பாள்புரத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால் இளங் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கல்விக்குழு உறுப்பினர் துரைமணிராஜன், அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை வைத்தார். அப்பகுதிக்கு புதிய பள்ளி அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து புதிதாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி துவக்க விழாவில் புவனகிரி சேர்மன் தனலட்சுமி கலை வாணன் தலைமை தாங்கினார்.
கல்வித்துறை அதிகாரிகள் சவரிமுத்து, பிரான்சிஸ்ஜெயராஜ், குணபாரி முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து முதல் வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் மதியழகன், ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் வரதராஜன், செல்வராசு,சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சித் தலைவர் ஆனந்திகுமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக