உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.16 கோடியே 96 லட்சம்: டி.ஆர்.ஓ. நடராஜன்

திட்டக்குடி :  

                   மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார்.நல்லூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சையத் ஜாபர் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் கந்தசாமி, ஒன்றிய ஆணையர் ரவிசங்கர்நாத், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, தாசில்தார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகாமில் 27 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் மற்றும் கலப்பு திருமண உதவித் தொகையாக மூன்று ஜோடிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய், 3 சலவைப் பெட்டி உட்பட 14 பயனாளிகளுக்கு 18 ஆயிரத்து  47 ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கி டி.ஆர்.ஓ., நடராஜன் பேசியது: 

                        தமிழக அரசு ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப் பட்டு அனைவருக்கும் வீடு வழங் கிட நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. குடிசை வீடுகள் அனைத்தும் "கான்கிரீட்' வீடுகளாக மாற்றிட அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 353 "டிவி'க்கள், 94 ஆயிரத்து 442 காஸ் அடுப்பு இணைப் புகள், 58 ஆயிரத்து 464 பேருக்கு முதியோர் உள்ளிட்ட உதவித் தொகைகள், 6 ஆயிரத்து 942 மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 647 பயனாளிகளுக்கு 16 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

                   கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில்தான் முதலில் வீடு கட்டி முடிக்கப்பட்டு துணை முதல்வரால் திறப்பு விழா கண்டுள்ளது. தற்போது 8 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் மந்தைவெளி புறம்போக்கில் குடி யிருப்போருக்கு ஒரு வாரத்திற்குள் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டி.ஆர்.ஓ., நடராஜன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior