சிதம்பரம்:
விபத்துகளைத் தவிர்க்க சிதம்பரம் புறவழிச்சாலை இரு சந்திப்புகளிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்புப் பேரவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு இதுவரை 5-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க புறவழிச்சாலையின் இரு சந்திப்புகளிலும் வேகத்தடை மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் புறவழிச்சாலை இருண்டு கிடப்பதால் விபத்துக்கு சாதமாகிவிடுகிறது. எனவே புறவழிச் சாலையில் இருபுறமும் மின்விளக்குகள், ஒளிர்பலகைகள் அமைக்க வேண்டும் என மனுவில் ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக