பரங்கிப்பேட்டை :
சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர், தச்சகாடு. சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு வழியாக புதுச்சத்திரத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் அதிலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் பஸ்சில் ஏறமுடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் நடந்து சென்று பு.முட்லூரில் இருந்து வெளியூர் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரங்களில் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இ வ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
I am residing in Chennai my birth town is cuddalore ot this site is very usfull to me .I have relatives in alapakkam I baught 1.2 acre agriculture land and iam interested in promote my mothers village alapakkam. thank you verymuch to this site