உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

வேர்க்கடலையில் நேர்த்தி தொழில் நுட்பம்: வேளாண் துணை இயக்குனர் தகவல்

விருத்தாசலம் : 

                வேர்க்கடலையில் அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை கையாண்டால் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் தற்போது வேர்க்கடலை அறுவடை நடைபெறுகிறது. எண்ணெய் வித்துப் பயிரான வேர்க்கடலையில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல விலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் கையாள வேண்டும்.

                   கடலை செடிகளை 90 முதல் 110 வது நாளில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் காய்களை தனியாகப் பிரித்து எடுத்து எட்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். இதை மூன்று முதல் நான்கு நாட்கள் செய்ய வேண்டும். ஈரப்பதம் 7 முதல் 11 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை காய் களை நன்றாக காய வைக்கவில்லை எனில் அப்லாடாக்சின் என்ற பூஞ்சாண வித்துக்களால் தாக்கப்பட்டு தரம் பாதிக்கப்படும். காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் கலந்துள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய் கள், சுருங்கிய முதிராத காய்கள், இதர ரகக் காய்கள் இவைகளை தனித்தனியாக பிரித்துவிட வேண்டும். 

                     சுத்தம் செய்யப்பட்ட வேர்க்கடலைகளை நல்ல கோணிப் பைகளில் போட்டு தரையில் மரச்சட் டங்கள் கிடத்தி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி சேமிக்க வேண் டும். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ள வணிகமுறை தரம் பிரிப்பு மையங்களுக்கு கொண்டு வந்து விற்று லாபம் பெறலாம்.மேலும் வேர்க்கடலை காய்களை உடைத்து பருப்பை எடுத்து காயவைத்து சுத்தம் செய்து சுத்தமான சாக்கு பைகளில் அடைத்து விற்பனை செய்வதன் மூலம் காய்களாக விற்பதை காட்டிலும் அதிக லாபம் பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior