உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிரால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

சிறுபாக்கம் : 
 
                சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிர் அமோக விளைச்சலால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

                  சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மங்களூர், மலையனூர், அடரி, மாங்குளம், எஸ்.நரையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நீர்பாசன நிலங்களில் மணிலா, பருத்தி, மஞ்சள், காய்கறிகள் மற்றும் நெல் பயிரினை விளைவித்துள்ளனர். இந்த பயிர்களுக்கு இடையே பாத்தி அமைத்தும், வயல் ஓரங்களிலும் ஆமணக்கு பயிர் செய் வது வழக்கம். பயிரிட் டுள்ள பயிர்களை காட்டிலும் ஆமணக்கு பயிர் கூடுதல் பயிராக பயிர் செய்துள்ளனர்.

                      இப்பயிருக்கு தேவையான உரம், நீர், களை கொத்துதல் உள்ளிட்ட எந்த செலவினமும் இல் லாமல் இயற்கையாகவே ஆமணக்கு காய்கள் அதிகளவு காய் பிடித்து விளைச்சலை தருகிறது. முன் எப்போதும் இல்லாத நிலையில் ஆமணக்கு விதையினை அதிகளவு விளைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior