கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான, 2011-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார்.
ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த வாக்காளர் பட்டியலில் 1-1-2011-ஐ தகுதி நாளாகக் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பாக படிவங்களை 9-11-2010 வரை அளிக்கலாம்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெயர்களை சேர்த்தல், படிவம் 7-ஐ பூர்த்தி செய்து நீக்கம் செய்தல், படிவம் 8 மற்றும் 8ஏ-ஐ பூர்த்தி செய்து, திருத்தம் செய்தல் ஆகிவற்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி களப் பணியாளர்கள் மற்றும் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை அளிக்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 15,97,518.இதில் ஆண்கள் 8,12,280. பெண்கள் 7,85,238 என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக