உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பிரசாரம்: போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிதம்பரம் : 

                சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்திய எல்லை முழுவதும் 25 மாநிலங்களில் விழிப்புணர்வு சைக் கிள் பிரசாரம் மேற் கொண்டு ஊர் திரும்பிய சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம், ஓசோன் பாதிப்பைத் தவிர்ப்போம், புவியின் தட்பவெப்ப நிலையைச் சீரமைப்போம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் கமாண்டர் மகேந்திரன் தலைமையில் அன்புச்செல்வன், வினோத்ராஜ், ராஜசெல்வம் ஆகியோர் இந்திய எல்லை பகுதியில் சைக்கிளில் பிரசார பயணத்தை கடந்த மே மாதம் 12ம் தேதி துவக்கினர்.

                      சிதம்பரத்தில் துவங்கிய சைக்கிள் பிரசாரம் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், பஞ்சாப், காஷ்மீர் உட்பட 25 மாநிலங்களில் 166 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணத்தை முடித்துக் கொண்டு சிதம்பரம் திரும்பினர்.சிதம்பரம் திரும்பிய போலீஸ் நண்பர்கள் குழுவினரை டி.ஐ.ஜி, மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் வரவேற்றனர். சிதம்பரம் போலீஸ் துறை சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது.விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசுகையில், "சாதனை செய்ய வேண்டும் என்ற போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த இந்த நான்கு இளைஞர்களும் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சாதித்து காட்டியுள்ளனர். அவர்கள் சென்றபோது, காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை, பீகாரில் கலவரம், வங்காளத்தில் நக்சலைட்கள் என பல சோதனைகளை கடந்து எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

                 அதற்காக அவர்களையும், அவர்களுக்கு ஊக்கம் அளித்த அவர்களின் பெற்றோரையும் பாராட்டுகிறேன். மற்ற இளைஞர்கள் இந்த சாதனை இளைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்' என பேசினார். விழாவில் ஊர்க்காவல் படை, ஆட்டோ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சாதனை இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஏற்பாடுகளை டி.எஸ்.பி., சிவனேசன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, கார்த்திகேயன், கண்ணபிரான்  செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior