"ஸ்லெட்' தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுகலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது. கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதலுடன் நடத்தப்படும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப் படிப்பும் மற்றும் அதுதொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 30-6-2010 அன்று யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறையில், கல்லூரி விரிவுரையாளருக்கான குறைந்தபட்ச தகுதியாக, முதுகலைப் பட்டப்படிப்பில் 55 சதவீத தேர்ச்சியும், "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயித்தது. மேலும் டாக்டர் பட்டம் (பி.எச்டி) பெற்றிருப்பவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து அறிவித்தது.
யு.ஜி.சி. புதிய விதிமுறை:

டாக்டர் பட்டம் முடிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும் என்பதால், கல்லூரி விரிவுரையாளர்கள் ஆக நினைக்கும் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
2 ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு இல்லை...:
"நெட்' தேர்வைக் காட்டிலும் எளிதாக இருக்கும் என்பதால், இவர்களில் பெரும்பாலானோர் "ஸ்லெட்' தேர்வையே எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக "ஸ்லெட்' தேர்வு நடத்தப்படவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் "ஸ்லெட்' தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் 14-12-2008 அன்று பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் விடுபட்ட 5 பாடங்களுக்கு மட்டும் 12-4-2009 அன்று "ஸ்லெட்' தேர்வு நடத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக