உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிப்பு: இன்றுமுதல் அமலுக்கு வருகிறது

                தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணை, திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது.  மின்சாரச் சட்டம் 2003-ன் படி மின்வாரியச் சீர்திருத்தத்தினை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. 
                
                 அதன்படி 53 ஆண்டு கால தமிழ்நாடு மின்சார வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அக்டோபர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு மின்வாரிய லிமிடெட், துணை உடைமை நிறுவனங்களாக தமிழ்நாடு மின்வாரிய மின் தொடரமைப்புக் கழகம் (டேன்டிரான்ஸ்கோ); தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் (டேன்ஜெட்கோ) என மின்சார வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

                  இவர்களில் டேன்டிரான்ஸ்கோவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதர ஊழியர்கள் டேன்ஜெட்கோவிலேயே தொடர்ந்து பணியாற்றுவர் என தெரிகிறது.  அரசாணையைத் தொடர்ந்து, தமிழக மின்வாரியத்தின் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்.  இனி ஊழியர்கள் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்களோ, அந்த நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

                  ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அரசே வழங்க வேண்டும் என்று மின்வாரியத் தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

தாற்காலிக மாறுதல் திட்டம்: 

                  இதன்படி பணியாளர்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு "தாற்காலிக மாறுதல் திட்டத்தின்' மூலமாக நவம்பர் 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவர்.  கண்டனக் கூட்டம்: இந்த நிலையில், மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு மின்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன நுழைவு வாயில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.  சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பும் கண்டன கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior