உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

மாணவர்களுக்கான அபாகஸ் மற்றும் மூளைத் திறன் போட்டி

சிதம்பரம்:
 
                 சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்னை விஸ்டா அகாதெமி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் விஸ்டா ஜீனியஸ்-2010  என்கிற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அபாகஸ் கணிதப்போட்டி மற்றும் மூளைத் திறன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
 
                 போட்டியை சிதம்பரம் டிஎஸ்பி ச.சிவனேசன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 
 
சாம்பியன் பட்டம் பெற்ற 7 மாணவ, மாணவியர்கள் விவரம்: 
 
                  3-ம் வகுப்பு- வி.சக்திவேல் (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 4-ம் வகுப்பு- வி.காயத்திரி (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 5-ம் வகுப்பு- வி.புவனேஸ்வரி (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 6-ம் வகுப்பு- எஸ்.கௌதம்குமார் (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 7-ம் வகுப்பு டி.அக்ûக்ஷ (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 8-ம் வகுப்பு- எஸ்.யோகேஸ்வரன் (காமராஜ் சிறப்பு பள்ளி), 9-ம் வகுப்பு - ஆர்.அரவிந்த் (செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, பாடலூர், பெரம்பலூர் மாவட்டம்).
 
                       மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, விஸ்டா அகாதெமி நிறுவன நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் எம்.கோட்னீஸ், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். பள்ளித் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் வாழ்த்தினார். விழாவில் காமராஜ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் எஸ்.மீனாட்சி, ஜி.சக்தி, துணைமுதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை அபாகஸ் தலைமை நிர்வாகி மலர்விழி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தயாபரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior