உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் புதிய படிப்புகள்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸஸ் என்ற படிப்பை அறிமுகம் சேய்தார்


சிதம்பரம்:

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வாயிலாக 2010-11-ம் ஆண்டுக்கான புதிய படிப்புகளான டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸிஸ் என்ற படிப்புகளை சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியது: 

                    பப்ளிஷிங் டிஜிட்டல் புத்தகங்களின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் நூலகங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது.இத்தகைய டிஜிட்டல் புத்தகங்கள் படிப்படியாக நூலகங்களில் அமையப் பெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில்,

                   "சென்னையில் உள்ள டிஜிஸ் கேப் கேலரி மற்றும் பிலாய் நிறுவனமான ஸ்டைல்ஸ் அகாதெமி ஆகியவற்றுடன் இணைந்து கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பி.எஸ்சி. டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸிஸ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்' என துணைவேந்தர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஹெச்.எம்.ஹெச். நிறுவன மேலாண்மை இயக்குநர் கசாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior