பண்ருட்டி:
அங்கன்வாடி மையத்துக்கென தனிக் கட்டடம் இல்லாததால் கீழ்காவனூர் அங்கன்வாடிக் குழந்தைகள் சிறிய ஊராட்சி அலுவலக அறையில் இடநெருக்கடியில் படித்து வருகின்றனர்.
பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தைச் சேர்ந்தது கீழ்காவனூர். இக்கிராம மக்கள் குழந்தைகளின் நலன்கருதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இதுநாள் வரை இந்த அங்கன்வாடி மையத்துக்கு கட்டட வசதி செய்துக் கொடுக்கவில்லை. இதனால் பலபேர் வீட்டு திண்ணையில் நடந்து வந்த அங்கன்வாடி மையம் தற்போது ஊராட்சி அலுவலக அறையில் செயல்பட்டு வருகிறது.
மிக சிறிய அறையில் நடக்கும் இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மணல் குவாரிக்கு வரும் லாரிகள் அதிக அளவு அங்கன்வாடி மையம் உள்ள இடத்தை சூழ்ந்து உள்ளதால் பாதுகாப்பு கருதி மையத்தினுள் மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக