உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்: பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படாததாலும், ஒழுங்குப்படுத்தப்படாததாலும் தினமும் பாலத்தில் இருபுறமும் வரும் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

                   நாகை, தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டது. தற்போது அப்பாலம் சேதமுற்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்பாலத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பாலத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அனைத்து பஸ்களும் சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக கும்பகோணம் சென்று வருகிறது.

                 இந்த பாலம் சேதமுற்றதால் நாகை மற்றும் அரியலூர், கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புதிய பாலம் அமைக்க தமிழக முதல்வர்  70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது |621 லட்சம் செலவில் பாலத்தை தாற்காலிகமாக சீரமைத்து பஸ்களை ஒரு வழிப்பாதையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலத்தில் பணி நடைபெற்று வரும் வேளையில் பாலத்தில் இருபுறமும் வாகனங்கள் இயக்கப்படுவதால் சீரமைக்கும் பணி மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

                  பாலத்தில் தினந்தோறும் இருபுறமும் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் பாலத்தை கடக்க 1 மணி நேரம் ஆகிறது. பாலம் சீரமைக்கும் பணி முடியும் வரை பாலத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் வாகனங்கள் இயக்காமல் இருக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியது 

                       "பாலம் சீரமைக்கும் பணி தொடர்பாக நவம்பர் 7-ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior