கடலூர் :
ஒரு வாரமாக மினி பஸ் இயங்கதாதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடலூரில் இருந்து டி.புதுப்பாளையத்திற்கு ஐந்து மினி பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மூன்று மினி பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் டி.புதுப்பாளையம், வண்டிக்குப்பம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பயனடைந்தனர்.இந்நிலையில் இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங் களாக ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது.
இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், எம்.புதூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது மாணவ, மாணவிகள் இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிக் குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக