உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

வெள்ளாற்று தரைப்பாலத்தில் வெள்ளம்: பொதுமக்கள் கடந்து செல்ல சிறப்பு ஏற்பாடு


திட்டக்குடி:

             திட்டக்குடி வெள்ளாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதையொட்டி திட்டக்குடியில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு ஆபத்தையும் உணராமல் பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தை கடந்து சென்றனர். இதில் பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை இளைஞர்கள் காப்பாற்றினார்கள்.

              இதை அறிந்த திட்டக்குடி தாசில்தார் கண்ணன் பொது மக்கள் பாலத்தை பாதுகாப்புடன் கடந்து செல்ல தீயணைப்பு துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வெள்ளாற்றில் கயிறு மூலம் பொது மக்களை பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

             கடும் மழையில் சொந்த ஊர் செல்ல பல கிலோ மீட்டர் சுற்றி சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் எடுத்த நடவடிக்கையால் வெள்ளாற்றை கடந்து செல்லுவது எளிதாகியதால் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior