உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

அண்ணாமலைப் பல்கலையில் மூன்று நாள் கட்டமைப்பு மாநாடு: துணைவேந்தர் தகவல்

சிதம்பரம்:

                 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 8ம் தேதி துவங்குகிறது என துணைவேந்தர் ராமநாதன்  கூறினார்.

இதுபற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் கூறியது:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏழாவது கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கட்டமைப்பு பொறியியல் வல்லுனர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதே மாநாட்டின் நோக்கமாகும். பல்வேறு ஐ.ஐ.டி., களிலும், 2008ம் ஆண்டு சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்.இ.ஆர்.சி.,) மாநாடு நடந்தது.

                  முதல் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இம்மாநாட்டில், இந்திய மற்றும் சர்வதேச அளவில் கட்டமைப்பு பொறியியல் சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்கின்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கட்டமைப்பு துறையில் உள்ள ஆய்வுக் கூடங்கள் தேசிய அளவிலான ஆய்வுக் கூடங்களுக்கு சமமானவை. மாநாட்டின் மையக் கருத்து கட்டமைப்பியல் பொறியியல் முன்னேற்றம் மற்றும் அதன் சீரான வளர்ச்சி என்பதாகும்.

                 இக்கருத்தை உள்ளடக்கி பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட உள்ளனர்.மாநாட்டை முன்னிட்டு, வரும் 7ம் தேதி "ஜியோ பாலிமர்' குறித்த ஒரு நாள் சர்வதேச செயற்பயிற்சி முகாம் ஏற்பாடு நடக்கிறது. மாநாட்டில் நடைபெறும் கட்டட பொருட்காட்சியில் 75 நிறுவனங்கள் பங்கேற்கிறது. ஜியோ பாலிமா குறித்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பேராசிரியர் ஜோசப் டேவிட விட்ஸ் எகிப்திய பிரமிடுகள் குறித்து 9ம் தேதி பேசுகிறார்.முதன்மை விருந்தினராக என்.எல்.சி., மேலாண் இயக்குனர் அன்சாரி பங்கேற்கிறார்.

                ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயரங்கன், அமெரிக்கா வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் ஷென் என் சென், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் பரமசிவம் மற்றும் பலர் சிறப்புரையாற்றுகின்றனர். இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior