கடலூர் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட அலை சுழற்சி.
கடலூர்:
கடலூர் மாவட்ட கடல் பகுதி ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்பட்டது.
அதைப் போன்று ஞாயிற்றுக்கிழமையும் கடலில் பலத்த காற்று வீசியது. அலைகள் 20 அடி உயரத்துக்கு மேல் எழுந்து ஆர்ப்பரித்தன. தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி, பெரியக்குப்பம், தம்பனாம்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, ரெட்டியார் பேட்டை, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட பல மீனவர் கிராமங்களில் கடல் நீர், 100 மீட்டர் தூரம் வரை நிலப்பரப்பில் புகுந்தது.
ஞாயிற்றுக்கிழமையும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நூற்றுக்கணக்கான விசைப் படகுகள், துறைமுகம் உப்பனாற்றின் கரையில் இழுத்துக் கட்டப்பட்டு இருந்தன. படகு கட்டும் தொழிலும் 15 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தச்சுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடல் அரிப்பு, ராட்சத அலைகளின் சீற்றம் காரணமாக, மீன்பிடி வலைகள் பலவும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக