உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

இந்திய அளவில் 2-ம் இடம்: பண்ருட்டி அரசுப் பள்ளி என்.சி.சி. படைப்பிரிவு சாதனை

பண்ருட்டி:

            புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொண்ட பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர், மாணவன் எல்.ராஜேஷ் ஆகியோர் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 2-ம் இடத்தை பெற்று பள்ளிக்கு திரும்பினர்.

              2011 ஜனவரி மாதம் புதுதில்லியில்  நடைபெற்ற என்.சி.சி. குடியரசு தின முகாமில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் என்.சி.சி. மாணவன் கார்பரல் எல்.ராஜேஷும், என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தரும் கலந்து கொண்டனர்.ஜெ.பாலசந்தர் தமிழக அணியின் என்.சி.சி. அலுவலராக 3-வது முறையாகவும், பள்ளியின் என்.சி.சி. மாணவன் தொடர்ந்து 2-வது முறையாகவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

             தமிழகத்தில் உள்ள 90 ஆயிரம் என்.சி.சி. மாணவ, மாணவிகளில் 107 மாணவர்கள் மட்டுமே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. திங்கள்கிழமை பள்ளி திரும்பிய என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர் மற்றும் மாணவன் எல்.ராஜேஷ் ஆகிய இருவரையும் தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வரவேற்று பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior