சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பட்டப் படிப்புகளுடனும், அந்தந்தப் படிப்புகள் சார்ந்த முதுகலை பட்டயப் படிப்பு (பி.ஜி. டிப்ளமோ) இலவசமாக கற்றுத்தரப்பட உள்ளது.
மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதியத் திட்டம் வரும் 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 72 முதுகலை பட்டப்படிப்பு துறைகளிலும் இதுபோன்ற பட்டயப் படிப்பு, மாணவர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் வழங்கப்பட உள்ளது.
இந்த பட்டயப் படிப்புக்கான பயிற்சிகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டும் அல்லாமல், முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்தும் அழைத்துவந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:
கலை, அறிவியல் முதுகலை பட்ட மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் இந்த முயற்சியை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டயப் படிப்பு, மாணவர் படிக்கும் முதுகலை பட்டப் படிப்பைச் சார்ந்ததாகவும், பயிற்சி சார்ந்ததாகவும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வரும் கல்வியாண்டு முதல் முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள், படித்து முடித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும்போது பட்டச் சான்றிதழுடன், முதுகலை பட்டயச் சான்றிதழையும் பெற்றுச் செல்வர் என்றார். மேலும் இளங்கலை பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இதுபோன்ற பட்டயப் படிப்பு வழங்குவது தொடர்பாக இணைப்புக் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்றும் துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
It's really good blog article for jobseekersவேலைவாய்ப்பு செய்திகள்