உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

           மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்குக் காத்து இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல், பதிவேட்டில்  காத்திருப்போராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. மற்றவர்களுக்கு 40. தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருத்தல் கூடாது. கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஆனால் அஞ்சல் வழியாக அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோராக இருக்கலாம்.

             தமிழ்நாட்டில் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வசிப்பவராகவும், ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக அசல் அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து, அதே அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

                  விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதி அடிப்டையில் 10 ஆண்டுகளுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 28-2-2011.கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி.க்கு மாதம் ரூ.300, எச்.எஸ்.சி.க்கு மாதம் ரூ.375. பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.450 வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior