கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்டிதது. கலெக்டர் சீத்தாராமன் பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 355 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலமாக்கல் நலவாரியத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.500 மதிப்புள்ள கண்கண்ணாடியும், ஒரு நபருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4 ஆயிரமும், ஒருவருக்கு திருமண நிதி உதவியாக ரூ.2 ஆகியவற்றை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கந்தசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), வனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக