உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

கனடா வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            மாணவர்கள் மேற்படிப்பு பயில கனடா நாட்டு வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

            பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கனடா நாட்டு வேளாண் கல்லூரி துணைத் தலைவர் பிரெயின் மெக்டோனால்ட், மேலாளர் பிரெயன்குரோஸ் ஆகியோர் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  அப்போது வேளாண் புல முதல்வர் முனைவர் ஜெ.வசந்தகுமார், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சி.ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.  

             புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: இந்த ஒப்பந்தப்படி அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல 3-ம் ஆண்டு அல்லது 4-ம் ஆண்டு மாணவர்கள் கனடா நாட்டுக்குச் சென்று மேற்படிப்பு படிக்கலாம்.  2-ம் ஆண்டு அல்லது 3-ம் ஆண்டு மாணவர்கள் கனடா சென்று மேலும் 2 அல்லது 3 ஆண்டுகள் பயின்று இரண்டு பட்டங்களை பெறலாம். மாணவர்கள் அங்கு சென்று பயிலும் போது படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் அங்கு பகுதி நேர வேலை செய்யவும் வழிவகை செய்யப்படும்.

              இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் அங்கு சென்று பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.  கனடா நாட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்து பயிலவும், ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என துணைவேந்தர் எம்.ராநாதன் தெரிவித்தார்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior