உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

நெய்வேலியில் 3 ஜி சேவை

கடலூர்:
             பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை மற்றும் தரைவழி தொலைபேசிச் சேவையில் சிறப்புப் சலுகைகளை பி.எஸ்.என்.எல். கடலூர் மாவட்ட (விழுப்புரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ சனிக்கிழமை அறிவித்தார். 
பொதுமேலாளர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
             சிம்கார்டு பயன்படுத்தி பேசும் லேண்ட் லைன் தொலைபேசியை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்த நிரந்தர ஒயர்லெஸ் தொலைபேசி ஆகும். வாடிக்கையாளர்கள் இதை ரூ. 1,450 விலையில் வாங்கிப் பயன்படுத்தலாம். அகண்ட அலைவரிசைச் சேவையில் சிறப்புக் கட்டண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 
             2 ஆண்டுக்கான மாதாந்திரக் கட்டணத்தை முன்னரே செலுத்தினால் 3 ஆண்டுக்கான சேவை கிடைக்கும். இதன்மூலம் ஓராண்டு அகண்ட அலைவரிசை மாதாந்திரக் கட்டணம் இலவசம்.3 ஆண்டு சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டை பயன்படுத்தும் லேண்ட் லைன் தொலைபேசி இலவசம். 18 மாதத்துக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, 24 மாதத்துக்கான அகண்ட அலைவரிசை சேவையைப் பெறலாம். செல்போன்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் பேசும் ஃபிரண்டஸ் அண்ட் ஃபேமிலி திட்டம் லேண்ட் லைன் தொலைபேசிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
               கட்டணம் நிமிடத்துக்கு இரவில் 10 காசு, பகலில் 20 காசு. இதுகுறித்த விவரங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் கிடைக்கும். புதிய லேண்ட் லைன் இணைப்பு பெறுவோருக்கு, சொந்த தொலைபேசிக் கருவி வைத்துக் கொண்டால், ரூ. 250 அமைப்புக் கட்டணம் இல்லை. வழக்கமான இலவச அழைப்புகளுடன் கூடுதலாக 300 அழைப்புகள் இலவசம்.
              வைமாக்ஸ் எனப்படும் வயர்லெஸ் இண்டர்நெட் சேவைக்கான கோபுரங்கள் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், திருக்கோயிலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லுரில் உள்ளன. மேலும் 20 ஊர்களில் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. 3 ஜி சேவை விரைவில் நெய்வேலிக்கு கிடைக்கும் என்றார் மார்ஷல் ஆன்டனி லியோ.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior