உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

தமிழ்நாட்டில் இலவச அரிசி திட்டம்: கோவில் அன்னதானத்துக்கு வரும் பக்தர்கள் குறைவு

           தமிழ்நாட்டில் ஜெயலலிதா 3-வது முறையாக கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றார். தமிழக மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 20 கிலோ அரிசி ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகிறது.

           தமிழ்நாட்டில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மதிய நேரம் உணவுக்காக எங்கும் அலையக்கூடாது என்பதற்காக மதிய நேரம் உணவு கோவில்களில் வழங்க கடந்த 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

           அதே சமயம் தமிழ்நாட்டில் இலவச அரிசி வழங்குவதால் கோவில்களில் வழங்கப்படும் மதிய உணவு சாப்பிட பக்தர்கள் கூட்டம் குறைந்தது. அனைவருக்கும் இலவச அரிசி கிடைப்பதால் கூட்டம் குறைவாக வருகிறது என பக்தர்களில் ஒருவர் தெரிவித்தார். 

        
             மேலும் முதியோர் உதவி தொகையையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ரூ.ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார். அதன்படி முதியோர்களுக்கு ரூ.1000 உதவி தொகையும், 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. இதனால் முதியோர் இல்லங்களிலும் சேருகிற கூட்டம் குறைந்தது. முதியோர் இல்லங்களில் சேர்ந்தவர்களும் பலர் வெளியேறி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior