தமிழ்நாட்டில் 9 ஊர்களில் கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளது.
விபரம்
1.ஸ்ரீரங்கம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
2.நெம்மேலி (சென்னை பல்கலைக்கழகம்)
3.நாகலாபுரம் (மனோன் மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகம்)
4.அரூர் (பெரியார் பல்கலைக்கழகம்)
5.கள்ளக்குறிச்சி (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்)
6.திருப்பத்தூர் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்)
7.திருச்சுழி (மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்)
8.வேதாரண்யம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
9.திருத்துறைப்பூண்டி (பாரதிதாசன் பல்கலைக் கழகம்)
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 9 புதிய கலைக் கல்லூரிகளை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்றுக் கொள்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக