தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டும்.தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாராகி வருகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப்பஞ்சாயத்துக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறையும் நகர்புற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய தேர்தல் கமிஷன் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களை வழங்குகிறது.
கிராமப்புற பகுதிகளில் பொது மக்கள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்காக 4 ஓட்டுகள் போட வேண்டியுள்ளது. எனவே கிராம பகுதிகளில் ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தற்போது கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களையும் முன்புபோல நேரடியாக பொது மக்களே தேர்ந்து எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக