உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் 15 ஆண்டுகளாக முறையாக இயங்காத துணை சுகாதார நிலையம்

பாழடைந்த நிலையில் கிடக்கும் அரசு துணை சுகாதார நிலையம்.
நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக முறையாக   இயக்கங்காமல் உள்ளது.  

              வடக்குத்து ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. 2006-ம் ஆண்டு தேர்தல் வரை பண்ருட்டி தொகுதியில் இருந்துவந்தது வடக்குத்து ஊராட்சி. 30 ஆண்டுகளுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ. வாகவும், தமிழக மின் துறை அமைச்சராகவும் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முயற்சியால் வடக்குத்து ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார தொடக்கத்ல் இயங்கிவந்தது.  ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த துணை சுகாதார நிலையம் போதிய பராமரிப்பின்றியும், நியமிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் சரிவர இந்த சுகாதார நிலையத்திற்கு முறையாக வந்து செல்லாததாலும், சரிவர இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது துணை சுகாதார நிலையம் பாழடைந்து கட்டடத்தின் உள்பகுதியில் சுவர்கள் இடிந்தும் காணப்படுகிறது. யாரும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் அக்கட்டிடம் உள்ளது.  

அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவு என்பவர் கூறுகையில், 

                      இந்த சுகாதார நிலையம் இங்கு அமைக்கப்பட்ட போது, இப்பகுதியைச் சுற்றியுள்ள 22 கிராம மக்கள் பெரும் பயனடைந்தனர். சிறிய காயச்சல் என்றால் கூட இங்குள்ள சுகாதாரப் பணியாளரிடம் கூறி ஏதேனும் மாத்திரை வாங்கிக் கொள்வோம், கர்ப்பிணிகளுக்கும் பெரிய உதவியாக இருந்தது.  நாளடைவில் இந்த துணை சுகாதார நிலையத்தை மாவட்ட நிர்வாகம் மறந்தே போய்விட்டது.

               தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ நகரப் பகுதிகளையும் மட்டும் பார்வையிட்டு சென்று விடுவதால், கிராமத்திலிருந்து இந்த துணை சுகாதார நிலையம் பாழடைந்து விட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள பெண் பணியாளர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாதம் ஒரு முறை வருவார், அதோடு சரி. அவரும் துணை சுகாதார நிலையம் குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என காத்திருந்து பலனில்லை என்றார் அப்பாவு.  

இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கூறுகையில், 

                 இந்த சுகாதார நிலையத்துக்கென ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் அப்பகுதியில் தினநதோறும் கிராம மக்களை சந்தித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்றார். கட்டடம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior