உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

சிதம்பரத்தில் தாய்ப்பால் வார விழா



சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தாய்ப்பால் வாரவிழாவில் பேசுகிறார் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம்
சிதம்பரம,:
 
           வளர் இளம்பருவத்தினர் வளமுடன் வாழ தங்களது உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.  
 
              சிதம்பரம் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் ஆகியவை இணைந்து தாய்ப்பால் வார விழாவை வாரம் முழுவதும் கொண்டாடுகிறது.   இவ்விழாவுடன் உப்பு கரைசல் தினம் மற்றும் வளரும் இளம்பருவத்தினர் தினம் ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் தாய்ப்பால் வாரவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  
 
விழாவில் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் பேசியது:  
 
              குழந்தை பருவத்துக்கு, வளர்ந்தவர்களுக்கும் நடுவில் உள்ளவர்கள் இளம் பருவத்தினர். இவர்கள் பிரச்னைகள் வித்தியாசமானது. இப்பருவத்தில் வேகமாக வளர்ந்து எடை 25 கி.கி. கூடுகிறது.÷உயரம் 25-30 செ.மீ. அதிகமாகிறது. அதிக வளர்ச்சி காரணமாக நிறைய சத்துப்பொருள்கள் தேவைப்படுகிறது.  ÷சரிவிகித உணவு இல்லாத பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது. கண் பார்வை கோளாறு வருகிறது. எனவே இப்பருவத்தில் உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.  
 
              ரோட்டரி மாவட்ட உதவி கவர்னர் முனைவர் ந.பஞ்சநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தாய்ப்பால் விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.  விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஆர்.கிருஷ்ணன் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக குழந்தை நலப்பிரிவு மருத்துவர் ராமநாதன் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
 
               மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கேசவன், இன்னர்வீல் சங்கத்தைச் சேர்ந்த வரலட்சுமி கேசவன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். இன்னர்வீல் சங்க நிர்வாகியும், ஆசிரியையுமான ஜி.சுந்தரி நன்றி கூறினார்.  
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior