உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

நானோ தொழில் நுட்பம் மருத்துவத் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

விழாவில் மாணவிக்கு பட்டமளிக்கிறார் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். உடன் (இடமிருந்து) பல்கலைக்கழக முதன்மையர் எஸ். வைத்திய சுப்பிரமணிய
   
                எதிர்கால அறிவியலில் நானோ ரோபோட் பிரதானமாகத் திகழப்போகிறது என்றார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். 
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 25-வது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.   பேசியது: 

              காலமாற்றங்களுக்கு ஏற்ப அறிவியல் தொழில்நுட்பங்களும் மாறிவருகிறது. இந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், தேவையானதாகவும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பமும், தொடர்பு தொழில்நுட்பமும் இணைந்து தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக ஏற்கெனவே மாறிவிட்டது.  மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் இடத்தை நானோ தொழில்நுட்பம் பிடித்துவிட்டது. இந்தச் சூழலில், நானோ தொழில்நுட்பமும், தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் இணையும் போது மருத்துவத்தில் இன்னமும் பல நவீனங்களை அடையலாம். இதிலிருந்து, நானோ ரோபோட் உருவாக்குவது சாத்தியமாகும். நானோ ரோபோட் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். 

              உடலில் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமே நானோ ரோபோட் கண்டுபிடித்து அழிக்கும். நல்ல செல்கள் உள்ள உடல் பாகங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது. இந்த சிகிச்சை முறைக்கு அதிகம் செலவாகும்.  சாஸ்த்ரா போன்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்கள் நானோ ரோபோட் தொழில்நுட்பங்களை கட்டுப்படியாகும் செலவில் மருத்துவத்தில் பயன்படுத்துவது குறித்து ஆராயலாம்.  எச்.ஐ.வி. பாதித்தோருக்கு நானோ மருத்துவ சிகிச்சை அளிப்பதால், பாதிக்கப்பட்டவரை மேலும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு உயிர்வாழும்படி செய்ய இயலும். நானோ ரோபோட் என்பதை மரபணு சார்ந்த தயாரிப்புகளாக உருவாக்கும் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்.  இந்தத் தயாரிப்பு ஒன்றை தென்கொரியா நாட்டில் பார்த்திருக்கிறேன். 

              நம் மாணவர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும்கூட இந்தத் தயாரிப்புகளைப் படைக்க இயலும். முடியவே முடியாது என்று கருதப்படுவதை, முடித்துக் காட்டுவதுதான் சரித்திரமாகிறது. முடியாது என்ற தடைக்கல்லை தகர்த்தெறிய வேண்டும்.அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கலை, விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்கள்தான் சாதனையாளர்களாகி உள்ளனர். முதன்முதலாக பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ். சுவாமிநாதன், வெண்மை புரட்சிக்கு வித்திட்ட வர்கிஸ் குரியன், இரும்பு தொழிலில் சாதித்த ஜாம்ஷெட்பூர் டாட்டா, கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த வரிசையில்தான் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். 

               நான், கடந்த 10 ஆண்டுகளில் 1.20 கோடி இளைஞர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. சவால்களோடு போராடுங்கள். உயர்ந்த இலக்கை நினைவில் வையுங்கள். அறிவைத் தேடுங்கள். கடினமாக உழையுங்கள். விடாமுயற்சியுடன் போராடுங்கள். இந்த வாழ்வியல் முறைகள்தான் உங்களை உச்சத்திற்கு கொண்டுபோகும் என்றார் அப்துல் கலாம்.  

               விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், அப்துல் கலாமுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 4,222 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் ஆர். கந்தசாமி, முதன்மையர்கள் எஸ். சுவாமிநாதன், எஸ். வைத்திய சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

கலாமிடம் விளக்கம் பெற... 

                 தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு 5-வது முறையாக குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வந்திருந்தார். இந்த முறை அவர் பல்கலைக்கழக ஆய்வு மையங்களை வெகுவாகப் பாராட்டி பேசினார். தான் எழுதிய இண்டோமிட்டபிள் ஸ்பிரிட், தி பேமிலி அண்ட் தி நேஷன், தி சயன்டிபிக் இந்தியா ஆகிய மூன்று நூல்களையும் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார். 

         மேலும், சாஸ்த்ரா மாணவர்கள் தன்னோடு கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், விளக்கங்கள் பெறவும்  




  என்ற இணையதளத்திற்கு வரும்படியும் கேட்டுக் கொண்டார்








.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior