கடலூர் அருகே மதலப்பட்டு கிராமத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையால் திரையிடப்பட்ட அரசு விடியோ திரைப்படக் காட்சி.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில், அரசின் சாதனை விளக்க, விடியோ திரைப்படக் காட்சி திரையிடப்பட்டு வருவதாக மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா அண்மையில் தெரிவித்தார்.
மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில், முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள், தமிழக அரசின் சாதனைகள், நல திட்டங்கள், செயல்பாடுகள், கடலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அடங்கிய "மலர்ந்தது அம்மாவின் பொற்கால ஆட்சி' என்ற செய்தி தொகுப்பு மலர் கிராமங்களில் திரையிடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி, மக்கள் தொடர்புத்துறை வாகனம் மூலம், மாலை நேரங்களில் இந்த விடியோ படக்காட்சி நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை கடலூர் பஸ் நிலையத்திலும், புதன்கிழமை குண்டு உப்பளவாடி, பெரியகங்கனாங்குப்பம் பகுதிகளில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது.
8-ம் தேதி கிளிஞ்சிக்குப்பம், சிங்கிரிகுடி, 9-ம் தேதி புதுக்கடை, செல்லஞ்சேரி, 10-ம் தேதி காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, 11-ம் தேதி நல்லாத்தூர், தென்னம்பாக்கம், 12-ம் தேதி தூக்கணாம்பாக்கம், எம்.பி.அகரம் ஆகிய இடங்களில் மாலை 7 முதல் 9 மணி வரை விடியோ படக்காட்சி நடைபெறும். பொதுமக்கள் இந்த விடியோ படக் காட்சிகளைக் கண்டு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக