
கடலூர்:
கடலூர் முதுநகர் மார்க்கெட் பகுதியில், பதுக்கி வைத்து சாராயத்தை விற்பனை செய்த, சாராய வியாபாரியை போலீசார் கைது செய்து, 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
கடலூர் முதுநகர் பகுதியில், கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., வனிதா உத்தரவின்படி, சிறப்பு படை சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சுப்ரமணியன், நடராஜ், ஏட்டுகள் ஆனந்தவேல், பரமகுரு மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் பகுதியில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், பக்தவச்சலம் மார்க்கெட் பகுதியில், ஒரு வீட்டில் சோதனை செய்ததில், 200 லிட்டர் கள்ளச் சாராய பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. உடன், கள்ளச் சாராயம் விற்பனை செய்த, கலியபெருமாள் மகன் ராஜி,30, என்பவரை, போலீசார் கைது செய்து, சாராயத்தை அழித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக