உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

சிதம்பரத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் பழைய காவலர் குடியிருப்பு




இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு. (உள்படம்) புதர் மண்டிய பகுதி.
 
சிதம்பரம்:
 
         சிதம்பரத்தில் உள்ள பழைய போலீஸ் குடியிருப்பு புதர் மண்டியும், சாக்கடை நீர் தேங்கியும், பழுதடைந்த கட்டடத்துடன் குடியிருக்க தகுதியற்ற மிக மோசமான நிலையில் உள்ளது.  
 
              சிதம்பரம் - சீர்காழி சாலையில் கோட்டாட்சியர் வீடு அருகில், பழைய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டடங்கள் முற்றிலும் பழுதடைந்துள்ளன.  குடியிருப்புக்குச் செல்லும் வழியில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டி உள்ளன. அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கியும் உள்ளது.  பழைய போலீஸ் குடியிருப்பில் மொத்தம் 21 வீடுதள் இதில் 15 வீடுகள் முற்றுலும் சேதமடைந்துள்ளதால் அவற்றில் காவலர்கள் யாரும் குடியேறாமல் காலியாக உள்ளன. 
 
             மீதிஉள்ள சுமாரான 6 வீடுகளில் போலீசார்  வசித்து வருகின்றனர். இதனால் சிதம்பரம் கோட்டத்தில் பணியாற்றும் போலீஸôருக்கு போலீஸ் குடியிருப்பில் வீடு கிடைக்காததால் வெளியில் அதிக வாடகைக்கு வசித்து வருகின்றனர். பழைய போலீஸ் குடியிருப்புக்கு அருகில் புதிதாக குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 21 வீடுகள். இதில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வீடும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 2 வீடும், காவலர்களுக்கு 18 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  சிதம்பரம் நகரம், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பணியாற்றுகின்றனர்.  
 
             ஆனால் மொத்தம் பழைய போலீஸ் குடியிருப்பு, புதிய போலீஸ் குடியிருப்பு 2-ம் சேர்த்து மொத்தம் 27 வீடுகள்தான் உள்ளன. இதனால் போலீசார்  பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மேலும் போலீசார்  குடியிருப்புக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது. எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பழைய குடியிருப்பை தாற்காலிகமாக சீரமைக்கவும், மேலும் புதிதாக வீடுகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே போலீஸôரின் எதிர்ப்பார்ப்பாகும்.  
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior