தேர்தல் நேரத்தில் எனது பேச்சை கேட்டு வாக்களித்தால் தமிழகத்தில் நல்லாட்சி நடத்த முடியும். அனைவருக்கும் சமூகநீதி கிடைக்கும். அனைத்து சாதியினரும் நன்றாக வாழ்வார்கள் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார். சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: விவசாயத்தை மட்டுமே நம்பி பயன் இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. எனவே வன்னிய சமுதாய மக்கள் கல்வி பயில வேண்டும். இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகுதான் வன்னியர்களுக்கு இவ்வளவு இடஒதுக்கீடாவது கிடைத்தது. இடஒதுக்கீடு என்பது திரையரங்கிலோ, திருமண வீட்டில் உணவிற்கோ இடம் பிடிப்பது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு தேவை. ஆனால் இதுவரை வன்னியர் சமுதாயத்துக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதற்காக நாம் இன்றும் ஆட்சியாளர்களிடையே கையேந்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாக்குகளை விலைக்கு கொடுத்துவிட்டனர். அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து தோற்கடித்துவிட்டனர்.
வன்னியர்கள் 120 தொகுதிகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்தால் 234 தொகுதிகளில் 120 தொகுதிகளில் வெற்றிபெறலாம். வன்னியர்களுக்கு 20 சதவீதி இடஒதுக்கீடு வழங்கக்கோரி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ச.ராமதாஸ் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக