பண் ருட்டி, நவ. 23:
பண்ருட்டி பகுதியில் திங்கள்கிழமை விட்டுவிட்டு மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கடந்த சில வாரங்களாக தீவிரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை, 4 நாள்களாக ஓய்ந்திருந்தது. மீண்டும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இரு நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் பல முறை வெயிலும், திடீர் மழையும் மாறி மாறி பெய்தது. இதனால் பொது மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக