உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

கடலூரில் டெங்குக் காய்ச்சல் அபாயம் மழை நீரை வெளியேற்றக் கோரிக்கை

கடலூர், நவ. 23:

கடலூர் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதால், டெங்குக் காய்ச்சல் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: கன மழையால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் சின்னாபின்னமாகி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயிருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கடலூர் மக்களைக் காப்பாற்ற வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போக்குவரத்தும் முடங்கிக் கிடக்கிறது. மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாகத் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மழைநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் பெருமளவுக்கு உற்பத்தியாகி மலேரியா, டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக நகரப் பகுதிகளை 25 கோட்டங்களாகப் பிரித்து, கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுநல அமைப்புகள் பலமுறை முறையிட்டும், நகரின் பிரதான சாலைகள் சரிசெய்யப்படாததால் தொடர்ந்து சேறும் சகதியுமாக்க காட்சி அளிக்கிறது. மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளை சீரமைக்கவும், கொசக்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior