கடலூர், டிச. 11:
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்வதில்லை என்று தீóர்மானித்துள்ளனர்.
மீன்தொழில் ஒழுங்குமுறைச் சட்டம் 2009ஐ மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. இதற்கு நா டுமுழுவதும் மீனவர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வரும் முன்பே அச்சட்டத்தின் அடிப்படையில், இந்தியக் கடற்படையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட கடலூர் மீனவர்களை இந்தியக் கடற்படை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.
இது தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 64 மீனவர் பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள், மற்றும் அனைத்து மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.
மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டு இருக்கும் மீன்பிடித்தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
வேலைநிறுத்தம் செய்யும் காலத்தில் யாரும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள், அனைத்து மீன் அங்காடிகளும் மூடப்படும், வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்படும், மீனவர்கள் அனைவரும் கறுப்புச் சினனம் அணிவர் என்றும் தெரிவித்தனர். தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பேரவையின்
கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பிóல் நிறுவனத் தலைவர் அன்பழகனர் தலைமையில் 17-ம் தேதி தில்லியில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்றும் சுப்புராயன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக