கடலூர் :
கடலூரில் அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலசங்கங்க ளின் கூட்டமைப்பு சார் பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு அனைத்து குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அரங்கநாதன் தலைமை தாங் கினார். இணை பொது
செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இப்ராஹீம், ராஜா முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் மருதவாணன் விளக்கவுரையாற்றினார். வழக்கறிஞர் திருமார்பன், பொது நல இயக்கம் வெண்புறா குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூரில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். திருவந்திபுரத்தை அரசு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். கோண்டூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பெண்ணையாற்றில் வெள்ளநீர் நகர் பகுதியில் புகுந்திடாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். மாணவர்கள் வசதிக்காக கடலூருக்கு சிறப்பு பேருந்துகள் காலை, மாலை இரு வேளையும் இயக்க வேண் டும். ஒருங்கிணைந்த வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக