உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

பண்ருட்டியில் அதி​முக பிர​மு​கர் கைது:​ காவல் நிலை​யம் முற்​றுகை

பண்ருட்டி,​​ டிச.​ 11:​ 

                 பண்​ருட்​டி​யில் சொத்து பிரச்னை வழக்​கில் கட்ட பஞ்​சா​யத்​துக்கு வர​ம​றுத்​த​வ​ருக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தா​கக் கூறி அதி​முக பிர​மு​கர் பன்​னீர்​செல்​வத்தை போலீ​ஸôர் வெள்​ளிக்​கி​ழமை கைது செய்​த​னர்.​ இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கட்​சி​யி​னர் காவல் நிலை​யத்தை முற்​று​கை​யிட்டு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​

                       பண்​ ருட்டி வட்​டம்,​​ ராம​சாமி தெரு​வைச் சேர்ந்​த​வர் சையது இஸ்​மா​யில் ​(51).​ இவ​ரும்,​​ இவ​ரது சகோ​த​ரர்​கள் சலீம் இப்​ரா​ஹிம்,​​ முஸ்​தபா ஆகி​யோ​ரும் சேர்ந்து கூட்​டாக தொழில் செய்து வந்​த​னர்.​ இதில் ஈட்​டிய வரு​வாய் மூலம் வாங்​கப்​பட்ட சொத்​து​கள் சலீம் இப்​ரா​ஹிம் பெய​ரில் உள்​ளன.​ இத​னி​டையே,​​ உடல்​ந​லக்​கு​றை​வால் அவ​திப்​பட்ட சலீம் இப்​ரா​ஹிம் கடந்த சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் இறந்​தார்.​

                   இ​தை​ய ​டுத்து,​​ பொது சொத்தை பிரிப்​ப​தில் சலீம் இப்​ரா​ஹிம் குடும்​பத்​தி​ன​ருக்​கும்,​​ சையது இஸ்​மா​யி​லுக்​கும் இடையே பிரச்னை ஏற்​பட்​டது.​ இது​தொ​டர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.​ இந்​நி​லை​யில்,​​ இது​தொ​டர்​பாக பேசி முடிக்க வரு​மாறு ஜெயல​லிதா பேர​வை​யின் முன்​னாள் செய​ல​ரான பன்​னீர்​செல்​வம் சையது இஸ்​மா​யி​லுக்கு அழைப்பு விடுத்​தா​ராம்.​ ஆனால்,​​ அதை அவர் ஏற்​க​ம​றுத்​து​விட்​டா​ராம்.​

                      இ​தை​ய​டுத்து,​​ பன்​னீர்​செல்​வம்,​​ அவ​ரது ஆத​ர​வா​ளர்​கள் சையது இப்​ரா​ஹிம்,​​ பயாஸ் அக​மது,​​ அப்​பாஸ்,​​ அப்​துல் காதர் ஆகி​யோர் சேர்ந்து,​​ கட​லூர் சாலை​யில் உள்ள இடத்தை ஆக்​கி​ர​மித்​த​ன​ராம்.​ இது​தொ​டர்​பாக பண்​ருட்டி காவல் நிலை​யத்​தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சையது இஸ்​மா​யில் புகார் கொடுத்​தார்.​

                           இந்​நி​லை​யில்,​​ வெள்​ளிக்​கி​ழமை காலை காந்தி பூங்கா அரு​கே​யுள்ள கடை​யில் பேசிக்​கொண்​டி​ருந்த அதி​முக பிர​மு​கரை காடாம்பு​லி​யூர் இன்ஸ்​பெக்​டர் செல்​வம் மற்​றும் போலீ​ஸôர் விசா​ர​ணைக்​காக ​ புதுப்​பேட்டை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்​ற​னர்.​ பின்​னர்,​​ கொலை மிரட்​டல் வழக்​குப் பதிந்து கைது செய்​த​னர்.​  இ​து​கு​றித்த தக​வல் அறிந்த அதி​மு​க​வி​னர் மற்​றும் ஆத​ர​வா​ளர்​கள் புதுப்​பேட்டை காவல் நிலை​யத்தை முற்​று​கை​யிட்டு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ இ​த​னி​டையே,​​ பண்​ருட்டி குற்​ற​வி​யல் நடு​வர் நீதி மன்​றத்​தில் ஆஜர்​ப​டுத்​தப்​பட்ட பன்​னீர்​செல்​வத்தை 15 நாள்​கள் நீதி​மன்​றக் காவ​லில் வைக்​கு​மாறு குற்​ற​வி​யல் நீதித் துறை ​ நடு​வர் வாசு​தே​வன் உத்​த​ர​விட்​டார்.​
            இ ​தற்கு கண்​ட​னம் தெரி​வித்த அதி​மு​க​வி​னர் ஜெயல​லிதா பேரவை நக​ரச் செய​லர் எம்.எம்.​ கம​லக்​கண்​ணன் தலை​மை​யில் போலீ​ஸô​ரை​யும்,​​ தமி​ழக அர​சை​யும் கண்​டித்து கோஷ​மிட்​ட​படி முக்​கி​யச் சாலை வழி​யாக ஊர்​வ​ல​மா​கச் சென்​ற​னர்.​ இ​த​னால் ஏற்​பட்ட பதற்​றத்​தை​ய​டுத்து,​​ பண்​ருட்​டி​யில் கடை​கள் அடைக்​கப்​பட்​டன.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior