உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

அரிசி மூட்டைகளை திருட முயற்சி லோடு மேன்கள் தப்பி ஓட்டம்

கடலூர் :

                    ரேஷன்கடைக்கு லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட அரிசி மூட்டைகளை கீழே தள்ளி திருட முயற்சி நடந்தது. பறக்கும் படையினர் பின்தொடர்ந்து வந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். கடலூர் நெல்லிக்குப் பம்  சாலையில் நுகர்பொருள் வாணிபகழக குடோன் உள்ளது.

                 கட லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள  ரேஷன் கடைகளுக்கு இங்கிருந்து அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.வழக்கம் போல நேற்று கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சமுட்டிக்குப்பத்திற்கு 200 அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் கண் ணன், மாவட்ட வழங் கல் அலுவலர் தேவராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சங்கர், சுப்ரமணி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை பின்தொடர்ந்து  சென்றனர்.  கடலூர் முதுநகர் அருகே செல்லும்போது  லாரி மீது இருந்த லோடுமேன்கள் சிலர் அரிசி மூட்டைகளை  கீழே தள்ளி னர்.

               இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பறக்கும் படை யினர் அந்த லாரியை மடக்கி நிறுத்தினர். அதிகாரிகள் சுற்றி வளைத்ததை கண்ட லோடுமேன்கள் லாரியில் இருந்து குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி மூட்டைகளை திருட முயன்ற லோடுமேன்களை தேடிவருகிறார்கள். 7 அரிசி மூட்டைகளையும் பறக்கும் படை அதிகாரிகள் மீண்டும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior