பண்ருட்டி, டிச. 11:
பண்ருட்டியில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி டிஎஸ்பி சிராஜுதீன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். பண்ருட்டி தனியார் பஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் கோ.காமராஜ், செயலர் எம்.சாமிநாதன், ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பண்ருட்டியில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போலீஸôர் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.÷பண்ருட்டியில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இவை இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். ஆட்டோக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அவை நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தும் பஸ், ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்ருட்டி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தினுள் வந்து செல்ல வேண்டும். ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது. பஸ் நிலையத்தினுள் பஸ்கள் அதிக வேகத்தில் செல்வதையும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பேசிய, அரசு போக்குவரத்துக் கழக நேர பரிசோதனை அலுவலர் பாலகிருஷ்ணன், பஸ் நிலையத்தில் மாடுகள் ஏராளமாக சுற்றித் திரிவதால் பஸ்ûஸ குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முடியவில்லை. மேலும் பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என போலீஸôரிடம் கோரிக்கை விடுத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக