கடலூர், டிச. 11:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி ருமாவளவன் எம்.பி. வழிகாட்டுதலின்படி, உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்திவருகிறது.
கட்சி சார்பில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் திட்டக்குடி வட்டத்தில் 8,869 குடும்பங்கள், விருத்தாசலம் வட்டத்தில் 4,753 குடும்பங்கள், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 6,750 குடும்பங்கள், சிதம்பரம் வட்டத்தில் 4,450 குடும்பங்கள், பண்ருட்டி வட்டத்தில் 3,076 குடும்பங்கள், கடலூர் வட்டத்தில் 2,076 குடும்பங்கள் வசிக்க வீடில்லாதவர்களாக இருக்கிறார்கள். எனவே கடலூர் மாவட்டத்திóல் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், சிறுபான்மையினர் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் 5 சென்ட் வீட்டுமனை வழங்க வேண்டும், வீடில்லாத அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை தாங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக