கடலூர், டிச. 11:
கடலூர் அரசு மருத்துவமனையில் போலீஸôர் பிடியில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதியை தனிப்படையினர் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த ராஜாவின் மனைவி லட்சுமி (33). திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட உடல்நலக்குறைவையடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மகளிர் காவலர் காவலுக்கு இருந்தார்.÷இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அதிகாலை கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற லட்சுமி அங்கிருந்து தப்பினார்.
இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி மகளிர் காவலர் இந்திரா பணியிடை நீக்கம் செய்ப்பட்டார்.
இதனிடையே, மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்த் உத்தரவின்பேரில், அமைக்கப்பட்ட தனிப்படையினர் தலைமறைவான லட்சுமியை ஆம்பூர் பகுதியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், குப்பம் கிராமத்தில் இருந்துவந்த லட்சுமியை ஆந்திர போலீஸôர் உதவியுடன் தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கிராமத்தில் தனியாக இருக்கும் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக, அவர் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக