சிதம்பரம், டிச. 18:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 77-வது பட்டமளிப்பு விழா இம்மாதம் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (சாஸ்திரிஹால்) மண்டபத்தில் நடைபெறுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
இவ்விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்று 2008-09 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், அறக்கட்டளை பரிசுகளையும் வழங்குகிறார். விழாவில் நேரடியாக 1333 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு துறைகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் 22 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், 123 பேருக்கு அறக்கட்டளை ரொக்கப் பரிசுகளையும் வழங்குகிறார். மேலும் 264 மாணவர்களுக்கு பிஹெச்.டி., எம்.ஃபில்., டி.எஸ்சி. (ங.டட்ண்ப்., டட்.ஈ., ஈ.ள்ஸ்ரீ) ஆராய்ச்சி பட்டங்களையும் வழங்குகிறார். நேரடியாக பயிலும் 4,781 மாணவ, மாணவியர்களுக்கும், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 97,413 மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 1,03,527 மாணவர்களுக்கு தபால் மூலம் பட்டம் அனுப்பப்படுகிறது. புதுதில்லி பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் வேத்பிரகாஷ் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றுகிறார். விழாவில் இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக