கடலூர் :
இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மீட்கப்பட்டு, பூமாலை வணிக வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளது.ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந் தது. கலெக்டர் சீத்தராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்டடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். திட்ட அலுவலர் ராஜஸ்ரீ உடனிருந்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 51 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆவணங் கள், கோப்புகள் வைக்கப் பட்டிருந்தன. ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கம் மற்றும் ஒன்றிய சேர்மன் அலுவலகமும் அங்கு இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கடலூர் சாமி, சிப்காட் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் இருந்த 10 கம்ப்யூட்டர்கள், 20 பீரோக்கள், 30 மேஜைகள், 50 சேர்கள் மற்றும் ஆவணங்களை மீட்டு அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் வைத்தனர்.ஊராட்சி ஒன்றிய கட்டத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டடம் கட்ட 1.40 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் விரைவில் கட்டுமான பணி துவங்கும் என பி.டி.ஓ., சீனிவாசன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக