உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

மணல் லாரிகளில் அடாவடியாக வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை

பண்ருட்டி : 

                  மணல் ஏற்றி வரும் லாரிகளிடம் அடாவடி வசூல் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் அரசு குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளில் கொரத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, திருத்துறையூர், உளுத்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் 20 ரூபாய் அடாவடி வசூல் செய்யப்பட்டு வருகிறது. 


                             இதனையடுத்து கலெக்டர் சீத்தாராமன் உத்திரவின்பேரில், பண் ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந் தது. தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் தேவநாதன், சுஜாதா, வசந்தி, தட்சணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரபீகுதீன், வி.ஏ.ஓ.,க்கள் பிரபாகரன், சரவணன், கவுரி, புருஷோத்தம்மன், ஜோதிமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


                       கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சார்பில், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலை மற்றும் குடிநீர் குழாய்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மின்கம்பங்கள் சேதமாகிறது. இதனை ஊராட்சி செலவில் தான் சீரமைக்க வேண்டியுள்ளது. மணல் குவாரியால் ஐந்து கிராமங்கள் பாதிக்கிறது. அதனால் ஊராட்சி அதிகாரப்படி மணல் லாரிகளில் நுழைவு வரி 20 ரூபாய் வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
 


                        அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., பேசுகையில் அடாவடி வசூலில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.வேறு யாரேனும் அடாவடி வசூலில் ஈடுபட்டால் வருவாய் துறைக்கும்,போலீசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். சாலைகள் சேதமாவது மற்றும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிப்பது குறித்து கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior